ஆட்டோமொபைல்
ரெவோல்ட் ஆர்.வி.400

ரெவோல்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு தேதி

Published On 2019-08-09 08:13 GMT   |   Update On 2019-08-09 08:13 GMT
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரெவோல்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



டெல்லியை சேர்ந்த ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ஆர்.வி. 400 மாடலை இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இது இந்தியாவின் முதல் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் விநியோகம் விற்பனை துவங்கியதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரெவோல்ட் ஆர்.வி. 400 ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது.

ரெவோல்ட் ஆர்.வி. 400 இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, இதன் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவு செய்வோருக்கு ரூ. 1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு ரெவோல்ட் மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசானில் நடைபெறுகிறது.



முதற்கட்டமாக ஆர்.வி. மோட்டார்சைக்கிள் டெல்லி மற்றும் பூனேவில் விற்பனை செய்யப்பட்டு அதன்பின் மற்ற நகரங்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெவோல்ட் ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் வாகன அம்சங்களை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த செயலியை கொண்டு மோட்டார்சைக்கிளின் பேட்டரி அளவுகளை பார்க்க முடியும். புதிய ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வரை செல்லும். 

இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் சாவி செருகும் அமைப்பிற்கு மாற்றாக பவர் ஆன் / ஆஃப் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கீலெஸ் பவர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News