ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்சர் 220எஃப்

வொல்கானிக் ரெட் நிறத்தில் பஜாஜ் பல்சர் 220 இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-08-07 07:29 GMT   |   Update On 2019-08-07 07:29 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 220எஃப் மோட்டார்சைக்கிள் புதிதாக வொல்கானிக் ரெட் எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 220எஃப் வொல்கானிக் ரெட் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் வொல்கானிக் ரெட் விலை ரூ. 1.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறத்துடன் பேஸ் மேட் ரெட் மற்றும் பக்கவாட்டு ஃபேரிங், பெல்லி பேன், முன்புற ஃபென்டர் மற்றும் டெயில் பகுதிகளில் பிளாக், ஆரஞ்சு டீக்கல்கள் கொண்டிருக்கிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் சிறிய ஆரஞ்சு நிற ஸ்ட்ரிப் காணப்படுகிறது.

பல்சர் 220எஃப் புதிய நிறம் தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வொல்கானிக் ரெட் நிறம் தவிர பஜாஜ் பல்சர் 220எஃப் மாடல்: பிளாக்/புளு மற்றும் பிளாக்/ரெட் என டூயல் டோன் நிறத்தில் கிடைக்கிறது.



பஜாஜ் பல்சர் 220எஃப் மாடலில் 220சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 21 பி.ஹெச்.பி. பவர், 19 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதன் சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல்-ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங்கிற்கு இரண்டு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் செட்டப் மற்றும் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பல்சர் 220எஃப் மாடல் தவிர பஜாஜ் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. அந்த வகையில் பி.எஸ். 6 கொண்ட முதல் பஜாஜ் வாகனமாக பல்சர் 150 விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். 
Tags:    

Similar News