ஆட்டோமொபைல்
ஹோன்டா சி.பி.300ஆர்

இந்தியாவில் ஹோன்டா சி.பி.300ஆர் விலை மாற்றம்

Published On 2019-08-06 09:57 GMT   |   Update On 2019-08-06 09:57 GMT
ஹோன்டா நிறுவனத்தின் சி.பி.300ஆர் மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டுள்ளது.



ஹோன்டா நிறுவனத்தின் சி.பி.300ஆர் மோட்டார்சைக்கிள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது சி.பி.ஆர்.250ஆர் மாடலின் விற்பனையை கடந்துள்ளது. இதுவரை ஹோன்டா சி.பி.ஆர்.250ஆர் மாடல் சுமார் 51 யூனிட்கள் விற்பனையாகி இருக்கும் நிலையில், சிபி.300ஆர் மாடல் 80 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இந்த ஆண்டு விற்பனைக்கான யூனிட்கள் விற்றுத்தீர்ந்து விட்ட நிலையில், அடுத்த ஆண்டிற்கான யூனிட்கள் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. ஹோன்டா சி.பி. ரக மற்ற மாடல்களை போன்று சி.பி.300ஆர் மாடலில் ஹோன்டாவின் நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே வடிவமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.



இது பார்க்க சி.பி.1000ஆர் மற்றும் சி.பி.650ஆர் மோட்டார்சைக்கிள்களை போன்று காட்சியளிக்கிறது. நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே வடிவமைப்பு மோட்டார்சைக்கிளின் ஹார்டுவேருக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கிறது. ஹோன்டா சி.பி.300ஆர் மாடலில் இன்வெர்ட்டெட் ஃபோர்க்ஸ், எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இது கேன்டி குரோமோஸ்பியர் ரெட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஹோன்டா சி.பி.300ஆர் மாடலில் 286சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30.45 பி.ஹெச்.பி. பவர், 27.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 296 எம்.எம்., பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News