ஆட்டோமொபைல்
ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைப்பு

Published On 2019-08-01 09:50 GMT   |   Update On 2019-08-01 09:50 GMT
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை குறைத்திருக்கிறது.



ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்திருக்கிறது. ஏத்தர் பேஸ் மாடல் தற்சமயம் ரூ. 1.02 லட்சத்திலும், உயர் ரக 450 மாடல் ரூ. 1.12 லட்சம் என மாறியிருக்கிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 15 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஏத்தர் எனர்ஜி வாகனங்களுக்கு விலை குறைப்பை அறிவித்திருக்கிறது.

முதற்கட்டமாக பெங்களூருவில் அறிமுகமான ஏத்தர் எனர்ஜி தற்சமயம் சென்னையிலும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. சென்னையிலும் இரு ஸ்கூட்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் ஏத்தர் 340 மாடல் விலை ரூ. 1.10 லட்சம் என்றும் ஏத்தர் 450 மாடல் விலை ரூ. 1.22 லட்சம் ஆக குறைந்திருக்கிறது.



இரு ஸ்கூட்டர்களிலும் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏத்தர் 450 மாடலில் சற்று பெரிய 2.45kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

ஏத்தர் 450 மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் 1.92kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்கூட்டர்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இரு ஸ்கூட்டர்களிலும் மல்டி-கலர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட், சார்ஜிங் பாயின்ட் டிராக்கர் மற்றும் OTA அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News