ஆட்டோமொபைல்
ரெவோல்ட் ஆர்.வி.400

ரெவோல்ட் ஆர்.வி.400 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-07-20 09:53 GMT   |   Update On 2019-07-20 09:53 GMT
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் வாகனமான ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் அறிமுகமான ஆர்.வி.400 ரெவோல்ட் மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசானில் முன்பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் முதல் ஏ.ஐ. வசதி கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ஆர்.வி.400 ஆகஸ்டு 7 ம் தேதி வெளியிடப்படுகிறது. வெளியீட்டை தொடர்ந்து இதன் விநியோகம் துவங்கும் என ரெவோல்ட் மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



முதற்கட்டமாக டெல்லி மற்றும் பூனேவில் விற்பனை செய்யப்படும் ஆர்.வி.400 மோட்டார்சைக்கிள், எதிர்காலத்தில் மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படும் என ரெவோல்ட் மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.400 மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெவோல்ட் ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் வாகன அம்சங்களை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த செயலியை கொண்டு மோட்டார்சைக்கிளின் பேட்டரி அளவுகளை பார்க்க முடியும். புதிய ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வரை செல்லும். 

இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் சாவி செருகும் அமைப்பிற்கு மாற்றாக பவர் ஆன் / ஆஃப் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கீலெஸ் பவர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News