ஆட்டோமொபைல்
சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன்

சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-07-19 07:53 GMT   |   Update On 2019-07-19 07:53 GMT
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2019 ஜிக்சர் எஸ்.எஃப். 155 மாடலின் மோட்டோ ஜி.பி. எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது 2019 ஜிக்சர் எஸ்.எஃப். 155 மாடலின் மோட்டோ ஜி.பி. எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் விலை ரூ. 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 800 அதிகம் ஆகும்.

புதிய மோட்டோ ஜி.பி. எடிஷனில் சுசுகியின் எக்ஸ்டார் டீகல்களை கொண்டிருக்கிறது. இதே போன்ற டீகல்கள் மோட்டோ ஜி.பி. ஜி.எஸ்.எக்ஸ். ஆர்.ஆர். மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மஞ்சள் நிற டீகல்கள் மோட்டோ ஜி.பி. தோற்றத்தை நிறைவு செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.



2019 சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 155 மாடல் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும், இதன் வடிவமைப்பு அம்சங்கள் ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டெயில் லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 155 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

மோட்டோ ஜி.பி. எடிஷனில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் 13.9 பி.ஹெச்.பி. பவர், 14 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News