ஆட்டோமொபைல்
பஜாஜ் சி.டி.110

இந்தியாவில் பஜாஜ் சி.டி.110 அறிமுகம்

Published On 2019-07-11 07:18 GMT   |   Update On 2019-07-11 07:18 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது சி.டி.110 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி.100 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பஜாஜ் சி.சி.110 விலை ரூ. 37,997 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கிக்-ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் விலை ரூ. 44,352 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மோட்டார்சைக்கிள் சி.டி.100 மற்றும் பிளாட்டினா 110 மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்படுகிறது. சி.டி.100 மற்றும் சி.டி.110 மாடல்களை வித்தியாசப்படுத்த புதிய மோட்டார்சைக்கிளில் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பிளாக்டு-அவுட் என்ஜின், ஹேன்டிள்பார்கள், சஸ்பென்ஷன் மற்றும் அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய பஜாஜ் சி.டி.110 மாடலில் புதிய டீக்கல்கள், பாடி கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இது வாகனத்தின் தோற்றத்தை மேம்படுத்தியுள்ளது. இத்துடன் டேன்க் க்ரிப்கள், ஃபோர்க் கெயிட்டர்கள், ரப்பர் கவரிங் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது.




புதிய பஜாஜ் சி.டி.110 மாடலில் 115சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 8.6 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். மற்றும் 9.81 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறனை வழங்குகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

சஸ்பென்ஷன் பார்க்க சி.டி.100 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதில் முன்புறம் 125 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பஜாஜ் நிறுவனத்தின் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம், ஆண்டி-ஸ்கிட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய பஜாஜ் சி.டி.110 மாடல்: கிளாஸ் எபோனி பிளாக், மேட் ஆலிவ் கிரீன் மற்றும் கிளாஸ் ஃபிளேம் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி, விநியோகமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News