ஆட்டோமொபைல்
கே.டி.எம். 390 அட்வென்ச்சர்

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-06-29 10:37 GMT   |   Update On 2019-06-29 10:37 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற சந்தைகளில் அறிமுகமாக இருக்கிறது.

இதுதவிர கே.டி.எம். இந்த மோட்டார்சைக்கிளை நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 2019 EICMA விழாவில் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள்களில் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலும் ஒன்றாக இருக்கிறது.

கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த டியூக் 200 நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் டியூக் 390 மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கே.டி.எம். நிறுவனம் ஆர்.சி. 200 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களை அறிமுகம் செய்தது.



சமீபத்தில் கே.டி.எம். 125சிசி பிரிவில் களமிறங்கியது. இந்நிறுவனம் இந்திய சந்தையில் கே.டி.எம். டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அதிக செயல்திறன் மிக்க வாகனங்களை விற்பனை செய்வதில் கே.டி.எம். முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அந்நிறுவனத்தின் வெற்றி பெற்ற வாகனங்களின் பட்டியலில் இணையும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்கள் 2014 ஆம் ஆண்டில் இருந்து வெளியாகி வருகிறது.
Tags:    

Similar News