ஆட்டோமொபைல்

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-06-18 10:34 GMT   |   Update On 2019-06-18 10:34 GMT
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்.வி. 400 ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியவில் அறிமுகம் செய்துள்ளது. ரெவோல்ட் ஆர்.வி. 400 மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ரெவோல்ட் ஆர்.வி. 400 மாடல் நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புற அப்சைடு-டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் எரிபொருள் நிறப்புவதற்கான டேன்க் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த மோட்டார்சைக்கிளில் பிரத்யேக ஃபேரிங் வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை மறைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற வடிவமைப்பில் அலுமினியம் ஸ்விங்-ஆர்ம் மற்றும் பெரிய ஸ்பிராகெட் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப் மற்றும் கிராப் ரெயில்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இருபுறமும் 8-ஸ்போக் கொண்ட அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முன்புற யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.



ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் சாவி செருகும் அமைப்பிற்கு மாற்றாக பவர் ஆன் / ஆஃப் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கீலெஸ் பவர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ரெவோல்ட் ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த செயலி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. 

இந்த மோட்டார்சைக்கிளில் ஜியோ-ஃபென்சிங், பைக் லொகேஷன், மேப்ஸ், நேவிகேஷன், ரியல்-டைம் பைக் விவரங்களான ரேன்ஜ் மற்றும் ஸ்பீடு உள்ளிட்டவற்றை காட்ட டிஸ்ப்ளே பயன்படுகிறது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என்ற வகையில் இதன் பேட்டரி திறன் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதில் ஆன் போர்டு சார்ஜிங் மற்றும் போர்டபிள் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. போர்டபிள் சார்ஜிங் அம்சத்தை கொண்டு பேட்டரியை கழற்றி, கட்டிடங்களினுள் எடுத்துச் சென்று 15 ஆம்ப் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இதில் வழங்கப்படும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும்.

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ரெவோல்ட் ஆர்.வி. 400 மாடல் 156 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜூன் 25 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு ரெவோல்ட் மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News