ஆட்டோமொபைல்

கே.டி.எம். ஆர்.சி. 125 அதிகாரப்பூர்வ வெளியீடு

Published On 2019-06-14 09:57 GMT   |   Update On 2019-06-14 09:57 GMT
கே.டி.எம். நிறுவனம் தனது ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிளின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது.



கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிளின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்த்ரியாவை சேர்ந்த கே.டி.எம். நிறுவனம் கடந்த ஆண்டு டியூக் 125 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. டியூக் 125 மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. ஸ்போர்ட் வடிவமைப்பு, அதிக செயல்திறன் மற்றும் விலை உள்ளிட்டவை இதன் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

டியூக் 125 போன்று ஆர்.சி. 125 மாடலும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என கே.டி.எம். நம்புகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் டியூக் 125 போன்றே ஆர்.சி. 125 மாடலிலும் ஆர்.சி. 200 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் பாகங்கள் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

ஆர்.சி. 125 மாடலில் எவ்வித காஸ்மெடிக் மாற்றங்களும் செய்யப்படாது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபேரிங் வடிவமைப்பு வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 2019 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கே.டி.எம். ஆர்.சி. 125 மாடலில் ஸ்ப்லிட் சீட்கள், ரியர் எல்.இ.டி. டெயில் லேம்ப் மற்றும் டையர் ஹக்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், பின்புற ஃபுட் பெக் வழங்கப்படுகிறது. ரியர் மிரர்களும் ஆர்.சி. மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

புதிய கே.டி.எம். ஆர்.சி. 125 மாடலில் 124சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14.3 பி.ஹெச்.பி. பவரை 9250 ஆர்.பி.எம்.-லும், 12 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கிறது.

மோட்டார்சைக்கிளின் இருபுறமும் டிஸ்க் பிரேக்கள், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., ரியர்-வீல் லிஃப்ட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. கே.டி.எம். ஆர்.சி. 125 மாடலின் முன்புறம் இன்வெர்ட்டெட் ஃபோர்க்களும், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் ஆர்.சி. 125 மாடல் யமஹா ஆர்.15 வெர்ஷன் 3.0 மற்றும் சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 155 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய கே.டி.எம். ஆர்.சி. 125 மாடலின் விலை இந்தியாவில் ரூ.1.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News