ஆட்டோமொபைல்

கே.டி.எம். 790 டியூக் இந்திய வெளியீடு மாற்றம்

Published On 2019-06-08 10:56 GMT   |   Update On 2019-06-08 10:56 GMT
கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் 790 டியூக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீடு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



இந்தியாவில் கே.டி.எம். 790 டியூக் வெளியீடு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக சிலமுறை கே.டி.எம். 790 டியூக் வெளியீடு மாற்றப்பட்டது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக கே.டி.எம். 790 டியூக் இருக்கிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கே.டி.எம். 790 டியூக் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகாது என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் கே.டி.எம். 790 டியூக் 2020 ஆண்டில் தான் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்திய வெளியீடு தாமதமாக முறையான அனுமதி பெறாதது தான் காரணம் என கூறப்படுகிறது.



இந்திய சந்தையில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாக மோட்டார் வாகன அதிகாரிகள் முறையான அனுமதி வழங்க வேண்டும். கே.டி.எம். 790 டியூக் இங்கு தான் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் பஜாஜ் பயிற்சி மையத்தில் இந்த மோட்டார்சைக்கிள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

கே.டி.எம். 790 டியூக் மாடலில் லிக்விட் கூல்டு, 799சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102.5 பி.ஹெச்.பி. பவர், 87 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 43 எம்.எம். WP அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் WP அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி ஸ்டான்டர்டு உபகரணமாக வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News