ஆட்டோமொபைல்

டி.வி.எஸ் அபாச்சி மாடல்களில் ஏ.பி.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது

Published On 2019-03-28 11:32 GMT   |   Update On 2019-03-28 11:32 GMT
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது அபாச்சி மோட்டார்சைக்கிள்களை ஏ.பி.எஸ். வசதியுடன் அப்டேட் செய்திருக்கிறது. #TVSApache



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது அபாச்சி மோட்டார்சைக்கிள்களுக்கு ஏ.பி.எஸ். வசதியை வழங்கியிருக்கிறது.

புதிய அப்டேட் மூலம் டி.வி.எஸ். அபாச்சி 160 மாடல் துவங்கி ஆர்.ஆர். 310 வரை அனைத்து மாடல்களிலும் ஏ.பி.எஸ். பாதுகாப்பு உபகரணமாக வழங்கப்படுகிறது. ஏ.பி.எஸ். வசதியுடன் டி.வி.எஸ். நிறுவனம் ஆர்.டி.ஆர். 160 2V (ஏ.பி.எஸ்.) மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இதில் புத்தம் புதிய பேக்-லிட் ஸ்பீடோமீட்டர், புதிய வகை சீட், ஹேன்டிள் பார் மற்றும் டி.வி.எஸ். ரேசிங் சார்ந்த கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.85,510 முதல் துவங்குகிறது. புதிய அப்டேட் ஆர்.டி.ஆர். 160 2V, அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4V மற்றும் அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மாடல்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.



ஆர்.டி.ஆர். 200 மாடலில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். மற்றும் ஆர்.எல்.பி. (ரியர் வீல் லிஃப்ட்-ஆஃப் புரோடெக்ஷன்) கண்ட்ரோல் வசதியுடன் கிடைக்கிறது. டி.வி.எஸ். தனது வாகனங்களில் வழங்கியிருக்கும் சூப்பர்மோட்டோ ஏ.பி.எஸ். விசேஷ முகமை மூலம் உருவாக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ரேஸ் டிராக் சார்ந்து வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. புதிய ஏ.பி.எஸ். வசதி மூலம் பயனர்கள் வளைவுகளிலும் வேகம் குறையாமல் சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் பெற முடியும்.
Tags:    

Similar News