ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம்

Published On 2019-03-09 11:16 GMT   |   Update On 2019-03-09 11:16 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 பஜாஜ் டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. #bajajdominar



இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் டாமினர் மோட்டார்சைக்கிளை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வந்த டாமினர் மோட்டார்சைக்கிளின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

இந்நிலையில், 2019 டாமினர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. புதிய மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்வோர் முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். விரைவில் அறிமுகமாக இருக்கும் டாமினர் மோட்டார்சைக்கிள் பஜாஜ் தனது புதிய விளம்பர படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.

அதன்படி புதிய மோட்டார்சைக்கிளின் முன்புறம் புதிதாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக 2019 டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்புறம் அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பார்க்க கே.டி.எம். 390 டியூக் போன்று காட்சியளிக்கின்றன.



மற்றபடி புதிய மோட்டார்சைக்கிளில் ட்வின்-போர்ட் எக்சாஸ்ட் கேனிஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய டாமினரில் அலாய் வீல்கள் மாற்றப்பட்டு, சிங்கிள் டோன் நிறம் பூசப்பட்டுள்ளன. தற்போதைய மாடலில் டூயல்-டோன் நிறம் பூசப்பட்டிருக்கின்றன. 

தற்போதைய டாமினர் மோட்டார்சைக்கிளில் 373.5சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 35 பி.எஸ். பவர், 35 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய என்ஜின் 39 பி.எஸ். பவர் மற்றும் 650 ஆர்.பி.எம். வழங்கும் படி டியூன் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்களின் படி மோட்டார்சைக்கிளின் விலை ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தற்சமயம் பஜாஜ் டாமினர் ரூ.1.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

பஜாஜ் டாமினர் மோட்டார்சைக்கிள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா சி.பி.ஆர்.300ஆர். ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் கே.டி.எம். 250 டியூக் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News