ஆட்டோ டிப்ஸ்

நெக்சான் EV கார் விலையை திடீரென குறைத்த டாடா மோட்டார்ஸ்!

Update: 2023-01-18 16:29 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
  • நெக்சான் EV சீரிஸ் விலை மாற்றப்பட்டு தற்போது துவக்க விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV மேக்ஸ் மற்றும் நெக்சான் EV பிரைம் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் குறைத்து இருக்கிறது. மேலும் நெக்சான் EV பிரைம் மாடலின் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

டாடா நெக்சான் EV பிரைம் மாடலின் விலை தற்போது ரூ.14 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இது முந்தைய விலையை விட ரூ. 50 ஆயிரம் குறைவு ஆகும். விலை குறைப்பின் படி டாடா நெக்சான் EV பிரைம் டாப் எண்ட் விலை ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் வேரியண்ட் ரூ. 85 ஆயிரம் விலை குறைப்பு பெற்று இருக்கிறது. இத்துடன் புதிதாக XM வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய நெக்சான் EV மேக்ஸ் XM மாடலுடன் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் சார்ஜர்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலில் எலெக்டிரானிக் பார்கிங் பிரேக், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், இஎஸ்பி, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், கீலெஸ் கோ, கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம், ஆல் வீல் டிஸ்க் பிரேக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய விலை விவரங்கள்:

டாடா நெக்சான் EV பிரைம் XM 30.2 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 50 ஆயிரம் குறைவு)

டாடா நெக்சான் EV பிரைம் XZ+ 30.2 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 31 ஆயிரம் குறைவு)

டாடா நெக்சான் EV பிரைம் XZ+ லக்ஸ் 30.2 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 31 ஆயிரம் குறைவு)

புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் XM 40.5 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம்

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ 40.5 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் 40.5 கிலோவாட் ஹவர், 3.3 கிலோவாட் சார்ஜர் ரூ. 18 லட்சத்து 49 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)

புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் XM 40.5 கிலோவாட் ஹவர், 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம்

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ 40.5 கிலோவாட் ஹவர், 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 17 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் 40.5 கிலோவாட் ஹவர், 7.2 கிலோவாட் சார்ஜர் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் (ரூ. 85 ஆயிரம் குறைவு)

Tags:    

Similar News