ஆட்டோமொபைல்
டிரையம்ப் டிரைடென்ட் 660

டிரையம்ப் டிரைடென்ட் 660 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2021-03-24 08:59 GMT   |   Update On 2021-03-24 09:01 GMT
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் இதன் விலை ரூ. 6 முதல் 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

டிரைடென்ட் 660 மாடலில் ப்ளூடூத் மாட்யூல் வசதியுடன் கூடிய டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு செயல்படும். மேலும் கூடுதல் தொகைக்கு கோப்ரோ கேமரா கண்ட்ரோல் செய்வதற்கான வசதியும் இந்த மாடலுடன் வழங்கப்படுகிறது. 



புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் காவசகி இசட்650 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.94 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News