ஆட்டோமொபைல்
ஹூண்டாய்

மூன்று ஹூண்டாய் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-05-25 09:24 GMT   |   Update On 2020-05-25 09:24 GMT
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆலையில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன ஆலை பணியாளர்களில் மூன்றுபேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதித்த மூன்று பேருடன் தொடர்பு கொண்டிருந்த 16-க்கும் அதிகமான ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் அடுத்த இரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் ஆலையில் சென்ற பகுதிகள் முழுக்க சுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பகுதிகள் முழுமையாக சுத்தம் செய்யப்படும் முன் மற்ற ஊழியர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்த ஹூண்டாய் உற்பத்தி ஆலை, மே 8 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆலை துவங்கிய முதல் வாரத்திலேயே மூன்று ஊழியர்களுக்கு சளி மற்றும் இருமல் ஏற்பட்டது. பின் கொரோனா சோதனை மேற்கொண்டதில், நோய்தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மூன்று ஊழியர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஹூண்டாய் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News