ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6

Published On 2019-10-21 10:27 GMT   |   Update On 2019-10-21 10:27 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.500 பி.எஸ்.6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மஹிந்திரா நிறுவன மாடல்களின் பி.எஸ்.6 வேரியண்ட் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் எக்ஸ்.யு.வி.500 எஸ்.யு.வி. மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களில் எக்ஸ்.யு.வி.500 மாடலின் ஃபியூயல் டேன்க்கில் பி.எஸ்.6 டீசல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் புதிய பி.எஸ்.6 மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. புதிய என்ஜின் அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500, 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் விற்பனையாகும் எக்ஸ்.யு.வி.500 மாடலில் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பி.ஹெச்.பி. பவர், 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய 2.0 லிட்டர் என்ஜின் இதைவிட அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.



புதிய எஸ்.யு.வி.யின் பி.எஸ். 6 மாடல் தவிர அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500 மாடலையும் மஹிந்திரா உருவாக்கி வருகிறது. அடுத்த தலைமுறை மாடல் அதிகளவு மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மஹிந்திராவின் எக்ஸ்.யு.வி.500 மாடல் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500 மாடலின் வெளிப்புறத்தில் புதிய முன்புறம், மேம்பட்ட பம்ப்பர்கள், ஹெட்லைட் மற்றும் புதிய கிரில் போன்றவை வழங்கப்படலாம். காரின் பின்புறத்தில் மேம்பட்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் அதிநவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெரிய தொடுதிரை டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை வழங்கப்படுகின்றன.

புகைப்படம் நன்றி: Zigwheels
Tags:    

Similar News