ஆட்டோமொபைல்
டொயோட்டா

டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்

Published On 2019-10-11 10:42 GMT   |   Update On 2019-10-11 10:42 GMT
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



டொயோட்டா இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கம் முதலே விற்பனையில் மந்த நிலையை சந்தித்து வருகிறது. செப்டம்பர் 2019 மாதத்தில் மட்டும் டொயோட்டா 17% சரிவை சந்தித்தது.

இதனிடையே டொயோட்டா நிறுவனம் கிளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கிளான்சா ஹேட்ச்பேக் மாடல் டொயோட்டா மற்றும் சுசுகி மாடல்களிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. கிளான்சா கார் மாருதி சுசுகி பலேனோ மாடலின் மறுஉருவாக்கப்பட்ட மாடல் ஆகும்.



அறிமுகமானது முதல் கிளான்சா மாடல் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது மாடலாக இருக்கிறது. மாதாந்திர அடிப்படையில் 19.42 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இன்னோவா கிரிஸ்டா எம்.பி.வி. மாடல் இருக்கிறது.
Tags:    

Similar News