ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார்

தீவிர சோதனையில் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார்

Published On 2019-10-05 11:14 GMT   |   Update On 2019-10-05 11:14 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை தார் மாடல் கார் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.



மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை தார் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

உற்பத்திக்கு தயாரான நிலையில் மும்பை வீதிகளில் சோதனை செய்யப்பட்ட புதிய தார் மாடல் பண்டிகை காலத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 தார் மாடல் அலாய் வீல்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இரண்டாம் தலைமுறை தார் மாடல் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதன் என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 4x4 டிரைவ்டிரெயின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 



புதிய காரின் கேபினில் பிரீமியம் பிட்களும் பவர் விண்டோக்கள், கிளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

தற்சமயம் மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2020 தார் மாடல் விலை ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய 2020 தார் மாடல் விலை ரூ. 10.05 லட்சத்தில் துவங்கலாம் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: Parked In Proportion
Tags:    

Similar News