ஆட்டோமொபைல்
மஹிந்திரா டி.யு.வி.300

இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள்

Published On 2019-10-03 10:32 GMT   |   Update On 2019-10-03 10:32 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டி.யு.வி.300 பிளஸ் 2020 மஹிந்திரா தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் உள்ள பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்படுகிறது.

ஸ்பை படங்களில் டி.யு.வி.300 பிளஸ் கார் தற்காலிக ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஆறு ஸ்லேட் கிரில், பிளாக் ஹனிகோம்ப் பேட்டன் கொண்டிருக்கிறது. அதன்படி புதிய தலைமுறை டி.யு.வி.300 பிளஸ் மாடலின் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்படுகிறது.



எனினும், பின்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. காரின் பக்கவாட்டுகளிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடலின் உள்புறம் மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகின்றன.

என்ஜினை பொருத்தவரை டி.யு.வி.300 பிளஸ் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

புதிய தலைமுறை டி.யு.வி.300 பிளஸ் மாடல் டாடா ஹேரியர், ஹூன்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: drivespark
Tags:    

Similar News