ஆட்டோமொபைல்
மாருதி வேகன்ஆர்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி XL5

Published On 2019-09-19 10:38 GMT   |   Update On 2019-09-19 10:38 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XL5 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



மாருதி சுசுகியின் XL5 இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய XL5 வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷன் ஆகும். இதன் விற்பனை மாருதியின் நெக்சா விற்பனையகங்களில் நடைபெற இருக்கிறது. புதிய வேகன்ஆர் XL5, வேகன்ஆர் மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் மாருதி சுசுகியின் வேகன்ஆர் கார் 1999 ஆம் ஆண்டு வெளியானது. குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களை கொண்டிருந்ததால் வேகன்ஆர் கார் இந்திய சந்தையில் அதிக பிரபலமானது. இன்றளவும் மாருதி வேகன்ஆர் பிரபல மாடலாக இருக்கிறது.



புதிய ஸ்பை படங்களில் XL5 கார் ஸ்டான்டர்டு வேகன்ஆர் மாடலை விட உயரமாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்கள், பிரமான்ட பம்ப்பர் வழங்கப்படுகின்றன. டெயில்கேட் மினிமலிஸ்ட் வடிவமைப்பு, தடிமனான க்ரோம் லிப் வழங்கப்பட்டிருக்கிறது.

வெளிப்புறத்தை போன்றே காரின் உள்புறமும் மேம்படுத்தப்பட்டு புதிய வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய காரில் இருக்கைகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் வழங்கப்படலாம்.

புகைப்படம் நன்றி: gaadiwaadi
Tags:    

Similar News