ஆட்டோமொபைல்
ரெனால்ட் டஸ்டர்

சோதனையில் சிக்கிய ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6

Published On 2019-09-18 10:50 GMT   |   Update On 2019-09-18 10:50 GMT
ரெனால்ட் டஸ்டர் காரின் பி.எஸ். 6 வேரியண்ட் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டஸ்டர் காரை புதிய பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்கிறது. புதிய டஸ்டர் பி.எஸ். 6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்பை படங்களில் புதிய டஸ்டர் பி.எஸ். 6 கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், காரின் வெளிப்புறங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. புதிய டஸ்டர் கார் சமீபத்தில் அறிமுகமாகி தற்சமயம் விற்பனை செய்யப்படும் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே காட்சியளிக்கும் என எதிர்பார்க்கலாம்.



காரின் உள்புறமும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. காரின் பெருமளவு மாற்றங்கள் என்ஜினில் மேற்கொள்ளப்படுகிறது. தற்சமயம் ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது.

இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 106 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின்: 85 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன், 110 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் செயல்திறன் என இருவித டியூனிங்கில் கிடைக்கிறது.

இரு டியூனிங்கில் குறைந்த செயல்திறனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், அதிக செயல்திறனுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: GaadiWaadi
Tags:    

Similar News