ஆட்டோமொபைல்
ஃபோர்ஸ் குர்கா

2020 ஃபோர்ஸ் குர்கா ஸ்பை படங்கள்

Published On 2019-09-16 10:32 GMT   |   Update On 2019-09-16 10:32 GMT
ஃபோர்ஸ் குர்கா 2020 வெர்ஷன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



ஃபோர்ஸ் குர்கா 2020 வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் அதன் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ரஷ்லேன் வெளியிட்டிருக்கும் ஸ்பை படங்களில் புதிய ஃபோர்ஸ் கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா 2020 அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. 2020 ஃபோர்ஸ் குர்கா  மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படலாம். வடிவமைப்பிலும் புதிய குர்கா மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது.

கடந்த ஆண்டு ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக குர்கா எக்ஸ்ட்ரீம் என்ற வாகனத்தை அறிமுகம் செய்தது. இதில் 2.2 லிட்டர் இன்-லைன் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 321 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



குர்கா மாடல்களின் குறைந்த திறன் கொண்ட வேரியண்ட்களில் 85 பி.ஹெச்.பி. பவர் கொண்ட என்ஜின்களை நீக்க முடிவு ஃபோர்ஸ் மோட்டார்ஸ் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படும் என தெரிகிறது. முந்தைய குர்கா மாடலில் ஃபோர்ஸ் நிறுவனம் ஏ.பி.எஸ்., சீட்-பெல்ட் ரிமைன்டர், பின்புற பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

புதிய தலைமுறை குர்கா மாடலின் உள்புறம் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய மாடலின் உள்புறம் சற்றே பழைய வடிவமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News