ஆட்டோமொபைல்
ஹூன்டாய் ஐ30

சோதனையில் சிக்கிய ஹூன்டாய் ஹேட்ச்பேக்

Published On 2019-08-23 11:03 GMT   |   Update On 2019-08-23 11:03 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் ஐ30 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



ஹூன்டாய் நிறுவனத்தின் ஐ30 பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

ஹூன்டாய் ஐ30 கார் நான்கு மீட்டர்களுக்கும் மேல் இருப்பதால் இரு எலைட் ஐ20 மாடலை விட அதிக இடவசதி கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில், ஐ30 ஹேட்ச்பேக் கார் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்சமயம் மூன்றாவது உருவாகி வருவது தலைமுறை மாடல் ஆகும்.



புதிய ஹேட்ச்பேக் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 10 ஸ்போக் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹூன்டாய் ஐ30என் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த கார் ஸ்கோடா ஆக்டேவியா வி.ஆர்.எஸ்., மினி கூப்பர் ஜெ.சி.டபுள்யூ. மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஃபோக்ஸ்வேகன் ஜி.டி.ஐ. போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

புதிய ஹூன்டாய் ஐ30 விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Zigwheels
Tags:    

Similar News