ஆட்டோமொபைல்
ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்

Published On 2019-08-17 11:15 GMT   |   Update On 2019-08-17 11:15 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.



ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. புதிய ஹேட்ச்பேக் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், மும்பை வீதிகளில் சோதனை செய்யப்படுகிறது. புத்தம் புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.



கிராண்ட் ஐ10 நியோஸ் ஐ10 பிராண்டிங்கில் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். இது ஏற்கனவே விற்பனையாகும் கிராண்ட் ஐ10 மாடலுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் ஹூன்டாயின் கேஸ்கேடிங் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் முன்புறத்தை அகலமாக்கி ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. என்ஜினை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பி.எஸ். பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் யூனிட் 75 பி.எஸ். பவர் மற்றும் 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் AMT அல்லது 5-ஸ்பீடு MT டிரான்ஸ்மிஷனுடன் வரும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: drivespark
Tags:    

Similar News