ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு புல்லட்

குறைந்த விலையில் புல்லட் 350 எக்ஸ் அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்டு

Published On 2019-08-09 11:09 GMT   |   Update On 2019-08-09 11:09 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குறைந்த விலையில் புல்லட் 350 எக்ஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குறைந்த விலையில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய புல்லட் 350 எக்ஸ் விற்பனையகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

புதிய மோட்டார்சைக்கிள் பிளாக்டு-அவுட் தீமுடன் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், புல்லட் 350 எக்ஸ் துவக்க விலை ரூ. 1,42,731 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 350 எக்ஸ் இ.எஸ். விலை ரூ. 1.61 லட்சம் (ஆன்-ரோடு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



ஸ்பை படங்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கொயர் சாரி கார்டு மற்றும் கன்வென்ஷனல் ரியர் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய புல்லட் மாடல் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

இதுதவிர புல்லட் 350 எக்ஸ் இ.எஸ். மாடலில் 3டி லோக் மற்றும் பிளாக் என்ஜின் கேசிங் கொண்டிருக்கிறது. தண்டர்பேர்டு 350 மாடலில் உள்ளதை போன்று புல்லட் 350 எக்ஸ் மாடல்களில் பிளாக்டு-அவுட் ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டையர்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய மாடலில் 346சிசி, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த என்ஜி்ன் 20 பி.எஸ். @5250 ஆர்.பி.எம். மற்றும் 28 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி:  Gaadiwaadi
Tags:    

Similar News