ஆட்டோமொபைல்
மஹிந்திரா இ கே.யு.வி.100

சோதனையில் சிக்கிய மஹிந்திரா கார்

Published On 2019-08-02 10:16 GMT   |   Update On 2019-08-02 10:16 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.



மஹிந்திராவின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல்கள் புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் வாகனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இ-கே.யு.வி.100 ப்ரோடோடைப் மாடல்கள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. காரின் முன்புற ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இத்துடன் ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் மற்றும் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. 



மஹிந்திரா இ-கே.யு.வி. மாடலில் 40 கிலோவாட் மற்றும் 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதில் 16kWh பேட்டரி பேக் வழங்ப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.

வாகனத்தின் எடையை ஈடுசெய்ய சஸ்பென்ஷனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், காரின் கேபின் ஸ்பேஸ் மற்றும் பூட் ஸ்பேஸ் உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புத்தம் புதிய மஹிந்திரா இ-கே.யு.வி. மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற மாற்றங்கள் செய்யப்படுகிறது. 

மஹிந்திரா இ-கே.யு.வி. விலை ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சலுகைகளின் மூலம் இதன் விலை மேலும் குறையலாம் என கூறப்படுகிறது. 

புகைப்படம் நன்றி: Lemon Green Studios
Tags:    

Similar News