ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ.

2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. ஸ்பை படங்கள்

Published On 2019-07-24 10:45 GMT   |   Update On 2019-07-24 10:45 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவத்தின் 2020 ஜி.எல்.ஏ. கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் எஸ்.யு.வி. மாடலான ஜி.எல்.ஏ. விரைவில் புதிய வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் தீவிர சோதனை செய்யப்படும் புதிய கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய 2020 ஜி.எல்.ஏ. மாடலின் உள்புறம் 2019 ஏ-கிளாஸ் மாடலை தழுவிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஸ்பை படங்களின் படி புதி ஜி.எல்.ஏ. மாடல் ஏ-கிளாஸ் ஸ்டீராய்டுகளை தழுவி உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மெல்லிய ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், முன்புற கிரில் வழங்கப்படுகிறது. புதிய காரில் 10-ஸ்போக் வீல்கள், ஸ்குவாட் ஸ்டான்ஸ் வழங்கப்படுகிறது.



காரின் உள்புறம் அதிநவீன வடிவமைப்பு, புதிய தலைமுறை வடிவமைப்பு உள்ளிட்டவை காரின் தோற்றத்தை பார்க்க 2019 ஏ கிளாஸ் மாடல் போன்று வெளிப்படுத்துகிறது. இத்துடன் சென்ட்ரல் கன்சோலுக்கு மாற்றாக இரண்டு டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தொடுதிரை வசதியும் MBUX யு.ஐ. கொண்டிருக்கும் என தெரிகிறது. 

2020 ஜி.எல்.ஏ. கார் எம்.எஃப்.ஏ. 2 பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. இதில் 1.3 லிட்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இது 163 பி.எஸ். பவர், 250 என்.எம். டார்க் மற்றும் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. இதன் உயர் ரக மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு யூனிட் வழங்கப்படுகிறது.

இது 224 பி.எஸ். பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8 டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 4-மேடிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது. 

புகைப்படம் நன்றி: motorauthority
Tags:    

Similar News