ஆட்டோமொபைல்
ஹோன்டா ஜாஸ் இ.வி.

மீண்டும் சோதனையில் சிக்கிய ஹோன்டா எலெக்ட்ரிக் கார்

Published On 2019-07-12 10:30 GMT   |   Update On 2019-07-12 10:30 GMT
ஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகிள்ளது.



இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல அறிமுகமாகி வருகிறது. சமீபத்தில் ஹூன்டாய் நிறுவனம் தனது கோனா இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற பெருமையை பெற்றது.

ஹோன்டா நிறுவனம் தனது ஜாஸ் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் சிலகாலமாக சோதனை செய்துவருகிறது. எனினும், இதுபற்றி ஹோன்டா தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஜாஸ் இ.வி. கார் இந்தியாவில் மீண்டும் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இம்முறை இந்த கார் டெல்லியில் சோதனை செய்யப்படுகிறது. காரின் வடிவமைப்பு பார்க்க ஹோன்டா ஃபிட் இ.வி. போன்றே காட்சியளிக்கிறது. ஹோன்டா ஃபிட் கார் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காரின் முன்புறம் சில்வர் நிற அக்சென்ட் செய்யப்பட்டு இருபுறங்கலில் உள்ள ஹெட்லேம்ப்களை இணைக்கிறது.



பின்பறம் சிறிய ராப்-அரவுண்ட் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது வழக்கமான எல்.இ.டி. டெயில்லேம்ப்களுக்கு மாற்றாக அமைந்திருக்கிறது. இத்துடன் காரில் பெரிய ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. இது பின்புற விண்ட்ஷீல்டை மறைந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.

ஜாஸ் இ.வி. காரில் அழகிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. சோதனை செய்யப்படும் காரில் இ.வி. என்பதை நிரூபிக்கும் சின்னம் எதுவும் இடம்பெறவிவ்லை, எனினும் காரின் முன்புற வலதுபக்கத்தில் சார்ஜிங் போர்ட் காணப்படுகிறது.

புகைப்படம் நன்றி: CarandBike
Tags:    

Similar News