ஆட்டோமொபைல்
தண்டர்பேர்டு எக்ஸ்

சோதனையில் சிக்கிய தண்டர்பேர்டு எக்ஸ்

Published On 2019-07-09 10:19 GMT   |   Update On 2019-07-09 10:19 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு எக்ஸ் FI BS-VI மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.



ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு எக்ஸ் FI BS-VI மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் டெயில் லேம்ப்கள் ரெட்ரோ தோற்றம் பெற்றிருக்கிறது. இதன் இன்டிகேட்டர்கள் பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளன.

இத்துடன் ஸ்ப்லிட் சீட் வடிவமைப்பு வித்தியாசமாகவும், காண்டிராஸ்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர புதிய மாடலில் குஷன் அதிக மென்மையாக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. பேக்ரெஸ்ட் நீக்கப்பட்டு ஸ்ப்லிட் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பேக்ரெஸ்ட் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



புதிய மாடலில் பிளாக்டு-அவுட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க சமீபத்திய 2020 கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. இதன் டிரான்ஸ்மிஷன் புதிதாக காட்சியளிக்கிறது. இதன் செயின் வாகனத்தின் இடதுபுறத்தில் காணப்படுகிறது.

2020 தண்டர்பேர்டு எக்ஸ் FI மாடல் 350சிசி மற்றும் 500சிசி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 350சிசி மாடலில் 346சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இதன் 500 சிசி மாடலில் 499சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் வருகிறது. இரு என்ஜின்களும் பி.எஸ். 6 விதிகளுக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில் இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News