ஆட்டோமொபைல்
கவாசகி காப்புரிமை படம் 2

ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் கவாசகி

Published On 2019-07-06 11:32 GMT   |   Update On 2019-07-06 11:32 GMT
கவாசகி நிறுவனம் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



கவாசகி நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது.

காப்புரிமை விவரங்களின் படி பேரலெல் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இது எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் என்ஜின் திறனை ஒரேசமயத்தில் பின்புற சக்கரத்திற்கு வழங்கும். இத்துடன் ஸ்ப்லிட் ஹைப்ரிட் சிஸ்டம் பற்றிய விவரங்களும் காப்புரிமையில் இடம்பெற்றிருக்கிறது.

இதுதவிர ஏ.சி. எலெக்ட்ரிக் மோட்டார், இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் இணைந்து ஒற்றை யூனிட்டாக வருகிறது. இதன் பேட்டரி என்ஜினின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான மோட்டார்சைக்கிள்களில் எரிபொருள் நிரப்பும் டேன்க் ஆகும். 



காப்புரிமையில் எரிபொருள் நிரப்புவதற்கான டேன்க் மோட்டார்சைக்கிளின் பின்பறம் பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தின் எடையை சீராக வைக்கிறது. இத்துடன் கூலண்ட் டேன்க் மோட்டார்சைக்கிளின் வலது புறத்தில் காணப்படுகிறது. இதன் மூலம் மோட்டார்சைக்கிளில் அதிக எடை கொண்ட பகுதி எலெக்ட்ரிக் மோட்டார் தான் என்பது தெரிகிறது. 

காப்புரிமை புகைப்படங்கள் ஜப்பானில் பதிவு செய்யப்பட்டு, அதன்பின் அமெரிக்காவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து புதிய கவாசகி மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News