ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45

சோதனையில் சி்க்கிய மெர்சிடிஸ் கார்

Published On 2019-06-28 09:59 GMT   |   Update On 2019-06-28 10:01 GMT
மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 கார் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை ஏ கிளாஸ் வாகனத்தை அந்நிறுவனத்தின் செயல்திறன் மிக்க ஆர்ம் பிரிவு உருவாக்கியிருக்கிறது. 

புதிய ஏ.எம்.ஜி. கார் நர்பர்குரிங் சர்கியூட்டில் சோதனை செய்யப்படும் புகைப்படங்களை பார்க்கும் போது கார் இறுதிக்கட்ட சோதனையை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. புதிய மெர்சிடிஸ் கார் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வெளியாகும் போது புதிய கார் அதிக திறன் கொண்ட ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது. புதிய காரில் அழகிய கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



இத்துடன் 7-ட்வின் ஸ்போக் ஏ.எம்.ஜி. வீல்கள் மற்றும் பிளாக்டு அவுட் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் பெரிய டிஃப்யூசர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஏ35 மாடலில் உள்ளதை விட பெரியதாகும். 

புதிய ஏ.எம்.ஜி. ஏ45 காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 382 பி.ஹெச்.பி. மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. காரின் புதிய என்ஜின் 30.5 பி.எஸ்.ஐ மற்றும் 416 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இந்த என்ஜின் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 4மேடிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. மேலும் இந்த காரில் டிரிஃப்ட் மோட் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி:  Automotive Mike
Tags:    

Similar News