ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ

Published On 2019-06-22 11:43 GMT   |   Update On 2019-06-22 11:43 GMT
மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.



மஹிந்திராவின் ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்கார்பியோ கார் அடுத்த ஆண்டு பெரும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. 

அந்த வகையில் புதிய காரின் வடிவமைப்பு முந்தைய மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய காரின் அப்ரைட் நோஸ், பில்லர், ஃபிளாட் பொனெட், மற்றும் ரூஃப் உள்ளிட்டவை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் முன்புறம் இம்முறை அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.



காரின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், இவை தரமான பொருட்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஸ்கார்பியோ மாடலில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தற்போதைய விதிகளுக்கு பொருந்தும் வகையில் கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படலாம். 




புதிய ஸ்கார்பியோ காரில் 2.0 லிட்டர் பி.எஸ். VI ரக டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 160 பி.எஸ். பவர் மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை புதிய காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த கார் அனைத்து கிராஷ் டெஸ்ட்களையும் எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு முதல் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஸ்காரிப்யோ இருக்கிறது. 

புகைப்படம் நன்றி: carwale
Tags:    

Similar News