ஆட்டோமொபைல்

சோதனையில் சிக்கிய 2020 ஹோன்டா சிட்டி

Published On 2019-06-15 10:36 GMT   |   Update On 2019-06-15 10:36 GMT
ஹோன்டா நிறுவனத்தின் 2020 சிட்டி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.



2020 ஹோன்டா சிட்டி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 2020 ஹோன்டா சிட்டி கார் சர்வதேச சந்தையில் அந்நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை மாடலாகவும், இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை மாடலாகவும் இருக்கும்.

தற்சமயம் விற்பனையாகும் 2020 ஹோன்டா சிட்டி கார் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க இந்த கார் பல லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஹோன்டா நிறுவன கார்களின் விற்பனையில் ஹோன்டா சிட்டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் ஹோன்டா சிட்டி கார் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் வெளிப்புற வடிவமைப்பு மட்டுமே தெளிவாக காட்சியளிக்கிறது.



ஏரற்கனவே எதிர்பார்த்தப்படி அடுத்த தலைமுறை ஹோன்டா சிட்டி கார் ஹோன்டாவின் பாரம்பரிய வடிவமைப்பை தழுவி உருவாகியிருக்கிறது. புதிய செடான் மாடல் முந்தைய மாடலை விட அகலமாகவும், நீளமாகவும் இருக்கும் என தெரிகிறது. காரின் முன்புறம் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், அகலமான கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்படுகிறது.

காரின் பக்கவாட்டில் புதிய மேட் பிளாக் நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பின்புறம் ஷார்க்-ஃபின் ஆன்டெனா, சிறிய ஸ்பாயிலர் கொண்ட பூட்லிட் மற்றும் புதிய எல்.இ.டி. டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் புதிய சிட்டி மாடல் தற்சமயம் விற்பனையாகும் காரில் வழங்கப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கிடைக்கும்.

எனினும், என்ஜின்களும் பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் டியூன் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் 2020 சிட்டி காரின் மைல்டு-ஹைப்ரிட் வேரியண்ட்டையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோன்டா சிட்டி கார் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ், மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூன்டாய் வெர்னா மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புகைப்படம் நன்றி: DriveMaster
Tags:    

Similar News