ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹோன்டா ஹெச்.ஆர். வி

Published On 2019-06-07 10:59 GMT   |   Update On 2019-06-07 10:59 GMT
ஹோன்டா நிறுவனத்தின் ஹெச்.ஆர். வி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஹோன்டா ஹெச்.ஆர். வி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஹெச்.ஆர். வி மாடல் ஹோன்டா நிறுவனத்தின் பிரீமியம் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படும் ஹோன்டா ஹெச்.ஆர். வி காரின் புகைப்படங்களை குவிக்ஷிஃப்ட் வெளியிட்டுள்ளது. புகைப்படங்களின் படி கார் பார்க்க தற்சமயம் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் ஹெச்.ஆர். வி மாடலை போன்றே காட்சியளிக்கிறது.



இந்திய சந்தையில் வெளியாக இருக்கும் ஹெச்.ஆர். வி கார் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஃபிளாக்‌ஷிப் சி.ஆர்.-வி காரை விட சிறியதாக இருக்கும் என தெரிகிறது. காரின் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பெரிய ஹோன்டா சின்னம் இடம்பெற்றிருக்கிறது.  

புதிய காரின் பம்ப்பர் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், காரின் முன்புறத்தில் இருந்து பின்புறம் வரை பிரத்யேக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 174 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இத்துடன் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.



இதுதவிர 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய ஹோன்டா ஹெச்.ஆர். வி கார் ஹூன்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டுர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. 

புகைப்படம் நன்றி: QuickShift 
Tags:    

Similar News