ஆட்டோமொபைல்

சோதனையில் சிக்கிய பி.எஸ். 6 ஆல்டோ கார்

Published On 2019-06-01 10:11 GMT   |   Update On 2019-06-01 10:11 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் பி.எஸ். 6 விதிகளுக்கும் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மாருதி சுசுகி ஆல்டோ கார் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனை செய்யப்படும் புகைப்படங்களின் படி புதிய ஆல்டோ 800 காரின் பின்புற எக்சாஸ்ட் சிஸ்டத்தில் புகை வெளியீடு சோதனை செய்யும் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

வழக்கமான ஆல்டோ 800 போன்று இல்லாமல், காரின் பின்புறம் இடதுபுறத்தில் ஆல்டோ பேட்ஜிங், மத்தியில் சுசுகி லோகோவும் இடம்பெற்றிருக்கிறது. இதுதவிர, மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறை ஆல்டோ காரையும் உருவாக்கி வருகிறது. இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை ஆல்டோ கார் ஃபியூச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



புகை வெளியீட்டு சோதனை உபகரணத்துடன் தற்சமயம் வெளியாகி இருக்கும் ஆல்டோ கார் புகைப்படங்களில் இது புதிய தலைமுறை மாடலாக இருக்கும் என்பதையே உணர்த்துகிறது. அந்த வகையில் இந்த காரின் பவர்டிரெயின் மட்டும் மாற்றப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

என்ஜினை பொருத்தவரை ஆல்டோ காரில் 1.0 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே என்ஜின் தற்போதைய ஆல்டோ K10 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்சமயம் புதிய தலைமுறை மாடல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போதைய மாடலில் உள்ள என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் AMT யூனிட் ஆப்ஷனாக தேர்வு செய்யும் வசதியுடன் வழங்கப்படுகிறது.

புதிய ஆல்டோ கார் தற்போதைய வேகன்ஆர் போன்று ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஸ்விஃப்ட் மற்றும் இக்னிஸ் போன்ற ஹேட்ச்பேக் மாடல்களும் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: CarAndBike
Tags:    

Similar News