ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2018 ஜீப் ரேங்ளர்

Published On 2018-03-14 09:05 GMT   |   Update On 2018-03-14 09:05 GMT
ஜீப் ரேங்களர் 2018 எஸ்.யு.வி. இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது.
மும்பை:

2018 ஜீப் ரேங்ளர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. கோவாவில் சோதனை செய்யப்படும் 2018 ஜீப் ரேங்ளர் 2017 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது

புதிய 2018 ஜீப் ரேங்ளர் மாடலின் முன்பக்கம் கிரில், பெரிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஃபெண்டர்களில் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டுகளில் லோவர் பெல்ட் லைன் வழங்கப்பட்டிருப்பதால், பெரிய கண்ணாடிகள் கொண்டிருக்கிறது. இதுதவிர வடிவமைப்புகளில் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. 

பின்புறம் நான்காம் தலைமுறை ஜீப் ரேங்ளர் மாடலில் பெரிய விண்ட்ஸ்கிரீன், புதிதாய் வடிவமைக்கப்பட்ட ஸ்லீக் எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர், பெரிய ஸ்பேர் வீல், மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய ஜீப் ரேங்ளர் நான்கு கதவுகள் கொண்டிருக்கிறது.


புகைப்படம்: நன்றி exoticcarsingoa

உள்புறத்தில் ஒரே மாதிரியான வடிவமைப்பு, டேஷ்போர்டு தற்சமயம் விற்பனையாகும் மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. எனினும், உள்புறம் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய எஸ்.யு.வி. மாடலில் 7-இன்ச் எல்.சி.டி. டிரைவர் இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் நீண்ட வீல்பேஸ் வழங்கப்பட்டுள்ளதால், எஸ்யுவி உள்புறத்தில் அதிக இடவசதி வழங்குகிறது. இதனால் முன்பக்கம் மற்றும் பின்புற இருக்கைகளிலும் அதிக இடவசதி வழங்குகிறது. பின்புற இருக்கைகள் பின்புறமாக வைக்கப்பட்டு இருப்பதால் கால் வைக்க அதிக இடவசதி வழங்குகிறது.

2018 ஜீப் ரேங்ளர் சர்வதேச மாடலில் 2-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் சர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் புதிய இன்ஜின் வழங்கப்படலாம் என்றும் இதில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News