ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 20 ஆயிரம் செலுத்தி எஸ்1 ப்ரோ மாடலை முன்பதிவு செய்தவர்கள் ஜனவரி 21, 2022 அன்று ஸ்கூட்டருக்கான முழு தொகையை செலுத்தலாம் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான வினியோகம் இம்மாத இறுதியில் துவங்குகிறது. இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.
ஸ்கூட்டர் மாடலின் வினியோகம் பலமுறை தாமதான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜனவரி 21, 2022 அன்று முழு தொகை செலுத்துவோருக்கு ஓலா எஸ்1 ப்ரோ மாடல் இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத துவக்கத்திலோ வினியோகம் செய்யப்பட்டு விடும் என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
Lohri ki lakh lakh vadhaiyan, Sankrati ki shubhkaamnayein, Pongal vazhthukkal!
We’re celebrating with our own harvest 🌾🛵 😎
Sea of scooters awaits! Final payment window opens Jan 21, 6pm in Ola App for all customers who've paid 20k. We'll dispatch across Jan & Feb. pic.twitter.com/RZSAeclC0e
— Bhavish Aggarwal (@bhash) January 14, 2022
முதற்கட்ட விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இரு ஸ்கூட்டர்களுக்கான புதிய முன்பதிவு தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் டிசம்பர் மாத வாக்கில் ஓலா எஸ்1 ப்ரோ மாடலுக்கான வினியோகம் துவங்கியது. இதுவரை 4 ஆயிரம் எஸ்1 ப்ரோ யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது.