பஜாஜ் நிறுவனம் பிளாட்டினா இஎஸ் வேரியண்டை தொடர்ந்து இந்தியாவில் ஏபிஎஸ் வசதி கொண்ட பிளாட்டினா 110 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏபிஎஸ் வசதியுடன் பிளாட்டினா 110 இந்தியாவில் அறிமுகம்
பதிவு: மார்ச் 05, 2021 11:39
பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிய பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏபிஎஸ் வேரியண்ட் விலை ரூ. 65,926 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 64,685 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பிரிவு வாகனங்களில் ஏபிஎஸ் வசதி பெறும் முதல் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 இருக்கிறது. புதிய பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடலின் முன்புறம் 240 எம்எம் டிஸ்க், சிங்கில் சேனல் ஏபிஎஸ் வசதியும், பின்புறம் 110 எம்எம் டிரம் பிரேக் மற்றும் சிபிஎஸ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பிளாட்டின் 110 ஏபிஎஸ் மாடலில் 115சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.4 பிஹெச்பி பவர், 9.81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், நக்கிள் கார்டு, நைட்ராக்ஸ் ஸ்ப்ரிங்-ஆன்-ஸ்ப்ரிங் ரியர் சஸ்பென்ஷன், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டையர்களை கொண்டுள்ளது.
புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடல் சார்கோல் பிளாக், வொல்கானிக் ரெட் மற்றும் பீச் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Related Tags :