பயணிகள் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
பயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்
பதிவு: டிசம்பர் 02, 2020 17:12
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் 2020, பயணிகள் வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2020 நவம்பர் மாதத்தில் டாடா நிறுவனம் 49,650 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
அதன்படி 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டாடா நிறுவனம் 20.7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. டாடா நிறுவனத்தின் மொத்த விற்பனை வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வணிக வாகனங்கள் 9 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை முந்தைய பண்டிகை கால மாதத்துடன் ஒப்பிடும் போது 108 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் எட்டு சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.
Related Tags :