ஹோண்டா நிறுவனத்தின் புதிய டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்
பதிவு: நவம்பர் 25, 2020 14:43
ஹோண்டா டியோ
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. இம்முறை டியோ ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 473 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா டியோ மாடல் எஸ்டிடி மற்றும் டாப் எண்ட் டிஎல்எக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை உயர்வின் படி டியோ பிஎஸ்6 ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 61,970 என்றும் டிஎல்எக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 65,320 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வெளியீட்டின் போது புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல்கள் விலை முந்தைய பிஎஸ்4 வெர்ஷன்களை விட முறையே ரூ. 5749 மற்றும் ரூ. 7099 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.
புதிய டியோ பிஎஸ்6 மாடலில் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.6 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டியோ பிஎஸ்6 மாடலில் ஏசிஜி ஸ்டாட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :