ஹூன்டாய் இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கிராண்ட் ஐ10 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஹூன்டாய் கிராண்ட் ஐ10 இந்திய வெளியீட்டு விவரம்
பதிவு: ஜூலை 11, 2019 15:29
ஹூன்டாய் கிராண்ட் ஐ10
ஹூன்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கிராண்ட் ஐ10 கார் இந்தியாவில் ஆகஸ்டு 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஐ10 காரின் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். முந்தைய கார்களை போன்று இந்த காரும் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.
புதிய கிராண்ட் ஐ10 கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய காரில் கேஸ்கேடிங் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கிரில் வென்யூ காரிலும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் கூர்மையான ஆங்கில்கள், ஹெட்லேம்ப்கள், டெயில் லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் உள்புறம் 8 இன்ச் அளவில் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புளு லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய ஐ10 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என்றும் இது பி.எஸ். 6 ரக புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 83 பி.எஸ். மற்றும் 116 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.2 லிட்டர் டீசல் யூனிட் 75 பி.எஸ். பவர், 194 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கிராண்ட் ஐ10 கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ மற்றும் டாடா டியாகோ போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.
புகைப்படம் நன்றி: Overdrive
Related Tags :