சாத்தான்குளம் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 10, 2021 20:00
கோவை மாவட்டத்தில் 57,982 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 3,389 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏப்ரல் 10, 2021 19:50
சில்லரை வியாபாரிகள் தங்களின் தர்ணா போராட்டத்தை இன்று தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். அதன்பிறகு இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.
ஏப்ரல் 10, 2021 19:42
கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் இன்று கூடுதலாக 350 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஏப்ரல் 10, 2021 19:32
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
ஏப்ரல் 10, 2021 19:15
தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10, 2021 18:39
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். வீடுகளிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏப்ரல் 10, 2021 15:38
தென்காசி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 10, 2021 15:21
கோவை மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட கருப்ப கவுண்டர் வீதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
ஏப்ரல் 10, 2021 15:13
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் திருச்சி கோவை ரோட்டில் வெள்ளமடை என்ற இடத்தில் தனியார் நூல் மில் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஏப்ரல் 10, 2021 14:48
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள்.
ஏப்ரல் 10, 2021 14:40
அவினாசியில் 250 படுக்கை உள்ளிட்ட வசதிகளுடன் மீண்டும் தனியார் கல்லூரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10, 2021 13:28
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று ஊழியர்கள் கண்காணித்தனர்.
ஏப்ரல் 10, 2021 13:05
சென்னையில் 45 வயதை கடந்தவர்கள் இன்னும் 10 லட்சம் பேர் தடுப்பூசி போடவில்லை. எல்லோரும் ஆர்வமுடன் முன்வந்து போட்டுக்கொண்டால் இன்னும் 10 நாட்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்து விடலாம்.
ஏப்ரல் 10, 2021 13:01
தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் சுகாதார துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஏப்ரல் 10, 2021 12:58
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏப்ரல் 10, 2021 12:53
சென்னையில் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.
ஏப்ரல் 10, 2021 12:25
காசிமேடு உள்பட மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 10, 2021 12:17
கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் உள்ளதா? என்று விசாரித்து பரிசோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10, 2021 11:55
முகக்கவசம் அணிபவர்களிலும் கணிசமானவர்கள் அதை உரிய முறைப்படி அணிவதில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 10, 2021 11:34