தொழில்நுட்பம்

சக்திவாய்ந்த அம்சங்கள் நிறைந்த டெல் ஏலியன்வேர் லேப்டாப்

Published On 2018-10-27 09:56 GMT   |   Update On 2018-10-27 09:56 GMT
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் கேமிங் திறன் கொண்ட புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. #ALIENWARE



கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் கணினி உபகரணங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெல் சமீபத்தில் கேமிங் திறன் கொண்ட புதிய ஏலியன்வேர் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது. 

ஏலியன்வேர் லேப்டாப்கள் என்றாலே தடிமனாக இருக்கும் என நமக்கு தெரியும், எனினும் இம்முறை டெல் இந்த வழக்கத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. அந்த வகையில் புதிய ஏலியன்வேர் லேப்டாப் மெலிதாகவும், எளிதில் கையாளும் வகையிலும் இருக்கிறது. 

புதிய எம்15 மாடல் நவீன வடிவமைப்பு, குறைந்த பெசல்கள் மற்றும் மெலிதாக இருக்கிறது. புதிய லேப்டாப்பின் சேசிஸ் மக்னீசியம் அலாய் மற்றும் காப்பர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏலியன்வேர் எம்15 மாடலில் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே 60ஹெர்ட்ஸ் பேனல் கொண்டுள்ளது. 



லேப்டாப்பினுள் சக்திவாய்ந்த அம்சங்கள், அதிகளவு கிராஃபிக்ஸ் பயன்பாட்டை தாங்கும் படி வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இன்டெல் கோர் ஐ5 அல்லது ஐ7 பிராசஸர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம், என்விடியா ஜிடிஎக்ஸ் 1060 ஓசி அல்லது 1070 மேக்ஸ் கியூ கிராஃபிக்ஸ் கார்டுகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த லேப்டாப் 32 எம்.பி. ரேம் மற்றும் அதிகபட்சம் டிபி எஸ்.எஸ்.டி டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது. 

ஏலியன்வேர் எம்15 லேப்டாப் 60Whr பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும். மேலும் பயனர்கள் 90Whr பேட்டரியை தேர்வு செய்யும் பட்சத்தில் 17 மணி நேர பேக்கப் பெறலாம். எம்15 கேமிங் லேப்டாப் எடை 2.18 கிலோவாக இருக்கிறது. முந்தைய ஏலியன்வேர் லேப்டாப் எடை 2.63 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 



டெல் ஏலியன்வேர் எம்15 சிறப்பம்சங்கள்:

- 15.6 இன்ச் ஸ்கிரீன் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
- 90 வாட் மற்றும் 60 வாட் பேட்டரி
- 8-ம் தலைமுறை / 6-ம் தலைமுறை இன்டெல் பிராசஸர் 
- மேக்ஸ் கியூ கிராஃபிக்ஸ்
- ஏலியன்வேர் கிராபிக்ஸ் ஆம்பிளிபயர்
- 16 ஜி.பி. ரேம் 
- 1000 ஜி.பி. மெமரி 
- யு.எஸ்.பி. போர்ட்

டெல் ஏலியன்வேர் எம்15 கேமிங் லேப்டாப் பேஸ் வேரியன்ட் விலை 1299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.95,586) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 25-ம் தேதி துவங்குகிறது. எனினும் என்விடியா ஜிடிஎக்ஸ் 1050 டிஐ கிராஃபிக்ஸ் கார்டு வேரியன்ட் நவம்பர் மாத மத்தியில் கிடைக்கும்.
Tags:    

Similar News