தொழில்நுட்பம்

விரைவில் இந்தியா வரும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்

Published On 2018-12-15 10:56 GMT   |   Update On 2018-12-15 10:56 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருப்பதை உணர்த்தும் வகையில், மூன்று ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சான்று பெற்றுள்ளன. #Redmi7 #Smartphones



சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ஸ்மார்ட்போன் வெளியாகி ஒருமாதம் நிறைவுறாத நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனினை வெளியிட் தயாராகி வருகிறது. 

நேஷ்வில் சேட்டர் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் சீனாவின் கம்பல்சரி சர்டிஃபிகேட் வலைதளத்தில் M1901F7C, M1901F7E, மற்றும் M1901F7T என்ற மாடல் நம்பர்களுடன் மூன்று சியோமி ஸ்மார்ட்போன்கள் சான்று பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி பிரபலமாக இருக்கும் நிலையில், மூன்று ஸ்மார்ட்போன்களும் ரெட்மி சீரிஸ் ஆக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் M18 என்ற மாடல் நம்பர் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஸ்மார்ட்போன்கள் M19 என துவங்குவதை வைத்து பார்க்கும் போது மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் 2019 ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News