தொழில்நுட்பம்

புதுவரவு: சாம்சங் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது

Published On 2017-01-04 13:13 GMT   |   Update On 2017-01-04 13:13 GMT
சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
சான்பிரான்சிஸ்கோ:

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை QLED டி.வி. சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் டிவியாக இது இருக்கும் என்றும் இந்த வகை டி.வி.க்கள் SUHD வகை டிவிக்களுக்கு மாற்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

புதிய QLED டி.வி.க்கள் முன்பை விட அதிக ஸ்மார்ட் என்றும் அனைத்து டி.வி. சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது. இதன் இயங்குதளம் எல்லாவற்றையும் புரிந்து கொள்வதோடு, புதிய எல்இடி டி.வி.க்களை சாம்சங் ஸ்மார்ட் ரிமோட் மூலமாக எளிதாக இயக்க முடியும். புதிய QLED டிவிக்களில் புதிய வகை மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சிறப்பான தோற்றம், அதிக துல்லியமான படங்களை பிரதிபலிக்கும் திறன் என பல்வேறு அம்சங்களில் புதிய சாம்சங் QLED டிவி மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய வகை டி.வி.க்களில் சிறப்பான அனுபவத்தை வழங்க சாம்சங் நிறுவனம் பிரத்தியேக மெட்டல் குவான்டம் டாட் பொருளை பயன்படுத்தியுள்ளது. 

புதிய வகை சாம்சங் ஸ்மார்ட் டி.வி.க்கள் இருவித மாடல்களில் கிடைக்கிறது. Q8 curved மற்றும் Q9 Flat என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் டி.வி.களின் 65-இன்ச் மாடல் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் Q9 Flat டி.வி.யினை சுவற்றில் மிக எளிதாக பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News