தொழில்நுட்பம்

இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

Published On 2019-06-11 04:22 GMT   |   Update On 2019-06-11 04:22 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனி்ன் விலையை இந்தியாவில் மீண்டும் குறைத்திருக்கிறது.



இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியிருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இதுவரை இல்லாத அளவு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் வலைதளத்தில் நடைபெறும் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் எனும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் ஒன்பிளஸ் 6டி பேஸ் மாடல் ரூ.27,999 விலையில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 6டி 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி. மெமரி மாடல் ரூ.29,999 விலையிலும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 6டி மாடலை குறைந்த விலையில் வாங்குவோர் மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 அறிமுகத்திற்கு முன் ஒன்பிளஸ் 6டி மாடலின் விலை குறைக்கப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 7 பேஸ் மாடல் விலை ரூ.32,999 என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

– 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
– 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
– 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

Tags:    

Similar News