தொழில்நுட்பம்

64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2019-05-24 07:09 GMT   |   Update On 2019-05-24 07:09 GMT
சாம்சங் நிறுவனம் 64 எம்.பி. கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



சாம்சங் நிறுவனம் மார்ச் மாதத்தில் 32 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா கொண்ட கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்சமயம் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70எஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ70 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்றும் இதில் 64 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ70எஸ் மாடலில் ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



இது சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 போன்றே பிக்சல்-மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதை கொண்டு இந்த கேமரா குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை தெளிவாக வழங்க முடியும். இதில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து புகைப்படங்கள் அதிக தெளிவாக மாற்றப்படுகின்றன.

இத்துடன் இந்த சென்சாரில் டூயல் கன்வெர்ஷன் கெயின் எனும் அம்சம் இருக்கிறது. இது சென்சார் பெறும் வெளிச்சத்தை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றி ஆட்டோ-ஃபோகஸ் தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படவைக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News