தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் தகவல்களை இத்தனை பேர் நம்புவதே இல்லை - ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்

Published On 2019-05-18 09:38 GMT   |   Update On 2019-05-18 09:38 GMT
வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.



வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான போலி செய்திகள் பரவி வரும் நிலையில் டெல்லியை சேர்ந்த டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுண்டெசன் அமைப்பு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வை நடத்தியது.

நாட்டின் 11 முக்கிய மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் பொதுமக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. போலி செய்திகளால் ஏற்படும் மோதல்களுக்கு யார் பொறுப்பு? என்ற தலைப்பில் நடந்த இந்த ஆய்வில் 3,138 பேர் கலந்து கொண்டனர்.

சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை சரிபார்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் பயனாளர்களிடம் ஏராளமான கோள்விகள் கேட்கப்பட்டது. இதில் 79 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வரை வாட்ஸ்அப்பில் செலவிடுவதாக கூறி உள்ளனர். 



13 சதவிகிதம் பேர் 3 முதல் 4 மணி நேரம் வரையும், 3 சதவிகிதம் பேர் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக வாட்ஸ்அப்பில் செலவிடுவதாகவும் தெரிவித்தனர். ஊடகங்களில் வந்த தகவல்கள் என பரவும் செய்திகள் குறித்த கேள்விகளுக்கு 4 சதவிகிதம் பேர் வீடியோக்களுடன் வரும் செய்திகளை மட்டும் நம்புவதாக கூறி உள்ளனர். 15 சதவிகிதம் பேர் புகைப்படங்களை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை 45 சதவிகிதம் பேர் நம்பவில்லை என்பது ஆய்வில் தெரிவித்துள்ளது. 13 சதவிகிதம் பேர் எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் இல்லை எனவும், 53 சதவிகிதம் பேர் 1 முதல் 5 குரூப்பிலும், 18 சதவிகிதம் பேர் 6 முதல் 10 குரூப்பில் இருப்பதாகவும், 4 சதவிகிதம் பேர் 30க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்புகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News