தொழில்நுட்பம்

ஹானர் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-05-16 06:21 GMT   |   Update On 2019-05-16 06:21 GMT
ஹீவாய் ஹானர் பிராண்டின் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மே 21 ஆம் தேதி லண்டனில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஹானர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


புகைப்படம் நன்றி: Win Future

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹானர் 20 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD பிளஸ் ஸ்கிரீன், கிரின் 980 7 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், இரண்டு 2 எம்.பி. கேமரா, f/1.75, f/2.4 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் மே 21 ஆம் தேதி தெரியவரும்.
Tags:    

Similar News